அமைச்சர்கள் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பதவியேற்பு!

0 570
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி தேர்தலில் 27-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.அன்பழகன், திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் முத்துவேல்- பரிபூரணதம்மாள் தம்பதிக்கு 1956-ம் ஆண்டில் மகனாக பிறந்தார். பி.யு.சி., எம்.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு சரண்யா, ரக்‌ஷனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அன்பழகன் 1983-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கலெக்டர் சிவராசு, இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக்கொண்டார்.

1989-ம் ஆண்டு திருச்சி நகர இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி நகர தி.மு.க. செயலாளராகவும், பின்னர் திருச்சி மாநகராட்சியானபிறகு, திருச்சி மாநகர தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் முதன்முதலில் 1996-ம் ஆண்டு மாநகராட்சியில் முதலியார்சத்திரம் பகுதியில் அப்போதைய 26-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4 முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.