சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திராநகரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் வீடு மற்றும் கிராப்பட்டி காந்திநகர் முதல் தெருவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் போலீசார் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.