முசிறி செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் அனுக்ரஹா விழா
திருச்சி, ஜன.29 முசிறி அருகே உள்ள செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “அனுக்ரஹா” பெற்றோர்களின் நல்வாழ்த்து மற்றும் ஆசி வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள செல்லம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் வருகின்ற அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள விருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு நல்லாசிகள் வழங்கும் ‘அனுக்ரஹா’ விழா நடைபெற்றது.
சௌடாம்பிகா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கலியமூர்த்தி கலந்து கொண்டு தன்னம்பிக்கை உரையாற்றினார்,
மாணவர்களிடையே உரையாற்றிய அவர் மாணவர்கள் தோல்வி குறித்த பயமின்றி, விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், உங்களின் உழைப்பு மட்டுமே உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும், கல்வி ஒன்று பெற்றோர்களின் தரத்தை வெளிப்படுத்தும், எதிர்காலத்தையும் நிலைநாட்டும் என்று ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார், இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு தங்களின் ஆசிகளை வழங்கி வாழ்த்தினார்கள், விழாவில் திரளான மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளுக்கு தேர்வில் தன்னம்பிக்கையூட்டும் விதமாக கையில் கயிறு கட்டி காலை வணங்க வைத்து நல்லஆசி வழங்கும் சிறப்பான நிகழ்வு நடைபெற்றது, ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆசி வழங்கி ஊக்கப்படுத்தினர்,
நிகழ்ச்சி மாணவ, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இருந்தது.