இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

0 394
Stalin trichy visit

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 2வது வாரத்தில் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான டெட் தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர்

தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், விண்ணப்பப்பதிவு தேதி மட்டும் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது வாழ்நாள் முழுதும் செல்லத்தக்க சான்றிதழாக வழங்கப்படும்.

தாள் 1: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியைமுடித்திருக்க வேண்டும்.

தாள் 2: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டம் பெற்று பி.எட் முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற் றுத்திறனாளிகளுக்கு ரூ.250. மற்றவர்களுக்கு ரூ.500 இதில் 2 தாள்களும் எழுதும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக கட்டணம் கட்ட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.