ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

0 413
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல் மற்றும் மன ரீதியான ஆலோசனைகள் வழங்குதல் ஆகியவற்றிற்காக சகி எனும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் மத்திய அரசினால் 2017-18ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு கீழ்காணும் விவரப்படியான கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்கு பணியாளர்–1ற்கு இரண்டு பணியிடங்கள் மற்றும் வழக்கு பணியாளர்–2ற்கு இரண்டு பணியிடங்கள், ஆக மொத்தம் 4 பணியிடங்களுக்கும் கல்வித் தகுதி சட்டப்படிப்பு அல்லது சமூகப்பணியில் முதுநிலை படிப்பு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம்(Law degree/Master in Social Work Atleast 3 Years Experience working on Violence against Women) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000.
பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)- ஒரு பணியிடத்திற்கு எழுத, படிக்கத் தெரிந்த, மூன்றாண்டு முன் அனுபவமுள்ள நபர் (Experience Atleast Three Years) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.6,400.

பாதுகாப்பு காவலர் (Security Guard) ஒரு பணியிடத்திற்கு இப்பணியில் 2 ஆண்டு முன் அனுபவம் (Experience Atleast 2 Years) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள், தங்களது சுய விவரங்களை தட்டச்சு செய்து, 05.03.2022 பிற்பகல் 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி எனும் முகவரிக்கு கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குபின் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0431-2413796 எனும் தொலைபேசி மூலமாகவோ அணுகி பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.