அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 491
Stalin trichy visit

திருச்சி, செப். 13 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை  அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வாரிசாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு (செப்.15) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.