உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம்

0 177
Stalin trichy visit

திருச்சி, செப். 13  உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டீன் ஹர்ஷயா பேகம் பங்கேற்பு:-

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக மனநலத்துறை மற்றும் கி ஆ பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து தற்கொலையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகரத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

எந்த தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர் நிகழ்ச்சிக்கு கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் உதயா அருணா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் பொறுப்பு அர்ஷயா பேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்த தற்கொலை தடுப்பு குறித்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.