முதியவர் அடித்து கொலை

0 551
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், துவரங்குறிச்சி அருகில் முக்கண் பாலம் எனும் இடத்தில் சிவாலயத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.