அரியமங்கலத்தில் 7 பவுன் நகை பறித்தவர் கைது
திருச்சி, ஜூன் 28 அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகரில் வசித்து வரும் இஸ்மாயில் வயது 60 என்பவர் இரவு தனது கடை அருகே இருந்த பொழுது அவரிடமிருந்து 7 பவுன் நகை பறித்துச் சென்ற வழக்கில் அரியமங்கலத்தைச் சார்ந்த நசுருதீன் என்பவரை அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் தனிப்படை பிரிவு காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.