எள் விதை வழங்கும் விழா…
லால்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் விவசாயிகளுக்கு எள் விதை வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு சார்பில் லால்குடி தென்றல் கூட்டுப் பண்ணைய
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் செய்நிலம் விவசாய விற்பனை கல்சர் மற்றும் இதயம் நல்லெண்ணெய் இணைந்து விவசாயிகளுக்கு மாபெரும் எள் விதை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழா திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துனை இயக்குநர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் சுசிலினா சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் , வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் சிவகாமி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவசக்தி, தினேஷ் மற்றும் வேளாண்மை அலுவலக பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விதை வழங்கும் விழாவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எள் விதைகள் வழங்கப்பட்டது.