போலி ஆவணம் தயாரித்து ஜாமீன் பெற்றவர் கைது
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீம நகர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் – இவர் மீது பண மோசடி தொடர்பாக ஏற்கனவே நம்பர் ஒன் டோல்கேட்டில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது – இந்நிலையில் இந்த வழக்கிற்கு ஜாமீன் பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதன் உண்மை நிலை கண்டறிந்ததை அடுத்த நீதிமன்ற உத்தரவின் படி திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் இஸ்மாதிலை 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.