பைக் மீது கார் மோதி விபத்து கணவன் மனைவி படுகாயம்

0 288
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி படுபாயமடைந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே வால்மால்பாளையம் பூங்காநகர் காலனியைச் சேர்ந்தவர் 50 வயதான சீனிவாசன். இவரது மனைவி 49 வயதான லோகாம்பாள்.இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நோக்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் அகரபாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 40 வயதான முருகன் காரில் பின்னால் வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் கூத்தூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்மனைவி கீழே விழுந்த்தில் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.