கலைஞர் திருவுருவச் சிலை அமைக்க இடம் கோரி அமைச்சர் அன்பில் மகேஸ் மனு
திருச்சி, அக்.14 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் திருவுருவ சிலை அமைப்பதற்கு இடம் ஒதுக்கிதர வேண்டி பெல் செயலாண்மை இயக்குனரிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கொடுத்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொழிற் சாலை வளாகத்தில் திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் திருவுருவ சிலை அமைப்பதற்கு பெல் தொமுச தொழிற் சங்க கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிலை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டி பெல் செய க்ஷலாண்மை இயக்குநர் சீனிவாசனிடம் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி நேற்று முறைப்படி மனு கொடுத்தார்.
நிகழ்ச்சியில் திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், பெல் தொமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் கணேஷ்குமார், திருச்சி மாநகராட்சி 3ம் மண்டலத்தலைவர் மதிவாணன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலா ளர் கருணாநிதி, பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.