திருவானைக்காவல் அர்ச்சகர்களுக்கு சித்தாள் வேலை – பழிக்கு பழி வாங்கிய உதவி ஆணையர்!

0 747
Stalin trichy visit

பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்குரிய ஸ்தலமாக இருப்பது திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகும். இக்கோவிலில் பிரசாத முதற்கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் வெளிவந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. ‌


தவறு செய்து சிறை சென்றவர்கள் சிறைச்சாலையில் கல் உடைப்பது களி திண்பதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இன்று இயந்திரங்கல் வருகையால் அதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது. ஆனால் திருச்சி திருவானைக்காவல் கோவிலில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை வெளியே சொன்னார்கள் என சந்தேகப்படும் அம்மாளுக்கு கைங்கர்யம் செய்யும் கோவில் ஊழியர்களை சித்தால், கொத்தனார் செய்யும் மிக கடுமையான பணிகளை செய்ய திருக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் வற்புறுத்துவதாகவும், புல் டவுசர், ஜேசிபி போன்ற எந்திரங்களால் மட்டுமே தூக்கக்கூடிய மிக கடுமையான பாறைகளை மூன்று அல்லது நான்கு நபர்கள் சேர்ந்து தூக்க வற்புறுத்தும் மனிதாபிமானம் அற்ற “மனித உரிமை மீறும்” செயலில் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் உத்தரவிட்டிருப்பதாக, குற்றசாட்டு எழுந்துள்ளது.


சித்தால், கொத்தனார் செய்யும் அறிமுகம் இல்லாத மிக கடுமையான பணியை வேகாத வெயிலில் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் கோவில் ஊழியர்களை கொண்டு கோவில் வளாகத்திலுள்ள நந்த வனத்தில் பணியை மேற்கொள்வதும், உதவி ஆணையர் மாரியப்பன் அந்த பணியை தானே மேற்பார்வையும் செய்துள்ளபடியாக இருக்கும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் ஊழியர்களை சம்மந்தமே இல்லாத பணிகளில் கோவில் உதவி ஆணையர் ஈடுபடுத்துகிறார் என கோவிலில் உள்ளவர்களிடம் விசாரித்த போது… “கடந்த வாரம் திருவானைக்காவல் கோவில் பிரசாதம் விலை உயர்வு, பழைய பிரசாத விற்பனை உள்ளிட்ட சில விபரங்களை ஆதாரப்பூர்வமாக சமூக வலைதளத்திலும், திருச்சி மெயில் இணையதளம் பத்திரிக்கைகள் வாயிலாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மேலும் நேர்மையான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நமது குற்றசாட்டில் உள்ள உண்மை தன்மை காரணமாக துரித நடவடிக்கை எடுத்து பிரசாத விலையை குறைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாராட்டை பெற்றனர்.

இந்த குற்றசாட்டால் தனது குட்டு வெளிபட்ட ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கோவில் உதவி ஆணையர் ஆதாரபூர்வ குற்றசாட்டில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு திருத்திகொள்வதெற்கு பதிலாக பழிவாங்கும் நோக்கில் கோவில் தொடர்பான முறைகேடு தகவல்களை நமக்கு கொடுப்பது யார்? என்ற விசாரணையில் இறங்கி அதற்கு தண்டனையாக அப்பாவி கோவில் ஊழியர்களுக்கு கல்லை தூக்கும் தண்டனை கொடுத்ததுடன் அதனை தானும் அதனை நேரில் ரசித்து மேற்பார்வையிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து உண்மை நிலையை அறிய உதவி ஆணையர் மாரியப்பனை தொடர்பு கொண்டபோது, பதில் கிடைக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவானைக்கோவில் இதுபோல கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதையும் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆன்மிக ஆர்வலர்கள், பொதுமக்கள், மக்கள் நீதி மய்யம் மற்றும் பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.