நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு கல்லூரி செல்லும் சாலையில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மகன் கோபிகண்ணு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். பணிகள் முடிந்து வழக்கம்போல நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை நிதிநிறுவனத்தை கோபிகண்ணு திறக்க வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இரவு நிதிநிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியை உடைத்து பணம் தேடியுள்ளனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து சென்றனர். சம்பவம் குறித்து முசிறி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.