தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
மணப்பாறையில் ஜேசிஐ மணவை கிங்ஸ் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கான சாலைபாதுகாப்பு, தலைகவசம் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணவை கிங்ஸ் தலைவர் ஜெயம்.சி.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டல இயக்குனர் வழக்கறிஞர் முல்லை.எஸ்.சந்திரசேகர், சாசன தலைவர் எஸ்.கணேஷ்ராஜா, முன்னாள் தலைவர் எஸ்.சாகுல்அமீத், செயலாளர் ஆர்.குணசேகரன், இணை பொருளாளர் பி.குணசேகரன் மற்றும் மணவை கிங்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். பிரச்சாரத்தின்போது வாகன ஓட்டிகளிடம் சாலைபாதுகாப்பு, தலைகவசம் அவசியம் குறித்து விளக்கியதுடன் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.