புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை

0 379
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட்-2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்யலாம்.

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட்-2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தினை நேரில் இந்நிலையத்திற்கு வந்து இலவசமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம், விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.06.2023.

தொழிற்பிரிவுகள் கீழ்கண்டவாறு

ENGINEERING தொழிற்பிரிவுகள்: கம்மியர் மின்னணுவியல் (NCVT) (Electronic Mechanic), இயந்திர வேலையாள் (Machinist) (NCVT) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பயிற்சி காலம் 2 ஆண்டுகள்ஆகும்.

NON ENGINEERING தொழிற்பிரிவுகள் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (NCVT)(COPA), டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர் (NCVT) (DTPO), பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (Multimedia Animation & Special Effects) (NCVT), சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்) (NCVT) (Stenography English)

மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும்.

சுயதொழில் செய்வதற்கு ஏதுவான தொழிற்பிரிவுகள்

ஆடை தயாரித்தல் (NCVT)(Dress Making), அலங்காரப் பூத்தைத்தல் தொழில் நுட்பம் (Surface Ornamentation Techniques) (NCVT)

மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பயிற்சி காலம் 1 ஆண்டு ஆகும்.

மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் பயிலுவதற்கு மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையமானது 3 STAR அந்தஸ்து பெற்ற நிலையமாகும்

சிறப்பு அம்சங்கள் :

1) பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய Internship training வழங்கப்படும்.

2) பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர்.

சலுகைகள்:

1) பயிற்சிக் கட்டணம் இல்லை,

3) கட்டணமில்லா பேருந்து சலுகை

5) விலையில்லா மடிக்கணினி

(2) கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/-

(4) விலையில்லா மிதிவண்டி

(6) விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள்

7) விலையில்லா சீருடைகள் – 2 செட்

(8) தையற்கூலி ரூ.300/-(9) விலையில்லா காலணி ஒரு செட், 10) பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) புள்ளம்பாடி அவர்களை 94990-55721 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.