போக்சோ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

0 385
Stalin trichy visit

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்படி, எடமலைப்பட்டி புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் எடமலைப்பட்டிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கீழ்படிதல், சுய ஒழுக்கம் மற்றும் போக்சோ சட்டத்தின் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்-மாணவிகளுக்கு போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

மற்றும் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இதில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்ததிலிருந்து காப்பதுதான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான் . குழந்தையின் நம்பிக்கையை பயன்படுத்தி குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும் என எடுத்துரைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.