போதை பொருள் தடுப்பு, குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு, குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்மவர்மன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் பிரபு, நேத்தலிக் ஆகியோர் குழந்தை என்போர் யார், குழந்தைகளுக்கான உரிமைகள்,குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் குழந்தைகள் உடல் அளவில்,மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 செயல்பாடுகள், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், கல்வியின் அவசியம் குறித்தும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு புறத் தொடர்பு பணியாளர் கிருத்திகா குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு, சட்ட விரோதமாக குழந்தைகளை தத்தெடுத்தல், குழந்தை பாதுகாப்பு அலகின் பணிகள் குறித்தும், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ் குழந்தை கடத்தல், குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தல் குறித்தும், சோமரசம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, குழந்தை நல காவல் அலுவலரின் பணிகள்,குழந்தைகள் மீதான வன்முறை தடுத்தலில் காவலரின் பங்கு குறித்தும், விமன் பவர் டிரஸ்ட் மேரிஜூலியா, ஆல் த சில்ட்ரன் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் குழந்தை பாதுகாப்பில் தொண்டு நிறுவனத்தின் பங்கு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு துண்டு பிரசுரம், நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.