குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 305
Stalin trichy visit

தா.பேட்டை காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தா.பேட்டை காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தா.பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமை வகித்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் குறித்து சிறப்ரையாற்றி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதில் மாணவிகளின் பங்கு குறித்தும் குழந்தை நலம் சார்ந்த சட்டங்கள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் இளைஞர் நீதி சட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, காவல் உதவி செயலி செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வினாடி வினா,
கட்டுரைப்போட்டி உள்ளிட்ட அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. தா.பேட்டை காவல் நிலையத்தை மாணவிகள் பார்வையிட்டு நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
காவல் உதவி ஆய்வாளர்கள் பரமேஸ்வரன், பாலேந்திரன், ரவிசந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரமா, மாணவிகள், ஆசிரியர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.