சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது புகார்களுக்கு சமரச தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமரச மையம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மணப்பாறையில் சமரச தீர்வு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி மதுரை சாலையில் முடிவு பெற்றது. மேலும் சமரச தீர்வு நிறுவனத்தின் 18 ம் ஆண்டு நிகழ்வும் நடைபெற்றது.
இதில் மணப்பாறை சார்பு நீதிபதியும் சமரசமைய தலைவருமான எல். ஷகிலா, முதன்மை
மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.பாண்டி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.கோமதி, குற்றவியல் நீதிபதி சி.கருப்பசாமி, சமரச மைய வழக்கறிஞர்கள் துரை அழகிரி, வள்ளிக்கண்ணு, ராஜேஷ் கண்ணா, சின்னத்துரை மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.