வங்கியில் கடன் பெற்று மோசடி : கணவன், மனைவி மீது காவல்துறையில் புகார்

0 347
Stalin trichy visit

திருச்சி கண்டோன்மென்ட் பாரதியார் சாலை இண்டஸ் லேண்ட் பேங்க் வங்கியின் மூத்த மேலாளர் சரவணகுமார் (38). முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (31) மற்றும் அவரது கணவர் சையது காதர் பாட்ஷா (32) இருவரும் திருச்சி ஆர்சி பள்ளி எதிரே உள்ள இன்டுஸ்லேண்ட் வங்கிக்கு 19 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தனர் இதில் சரவணகுமார் 17 லட்சத்து 71 ஆயிரத்து 918 ரூபாய் கடன் தொகையை அவர்களுக்கு வழங்கி உள்ளார். நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்காமல் திருச்சியை சேர்ந்த அஸ்லாம் என்பவருக்கு பவர் எழுதி கொடுத்து  மேலாளர் சரவணகுமாரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் கண்ட்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.