மணப்பாறை அருகே பகவதி அம்மன், மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

0 450
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள பகவதி அம்மன், மாரியம்மன், கருப்பசாமி, மாசி பெரியண்ணசாமி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவுற்றத்தை அடுத்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இன்று புனித நீர் கோபுர கலசத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. பின்னர் மக்கள் மீது புனித நீர் உற்றப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.