பாரத் கெளரவ் சிறப்பு சுற்றுலா ரயில் குறித்து ஐ.ஆர்.சி.டிசி பொது மேலாளர் விளக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) பாரத் கெளரவ் சிறப்பு ரயில் சுற்றுலா குறித்து செய்தியாளர் சந்திப்பு திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்பொது பேசிய …. IRCTC பொது மேலாளர் ரவிகுமார் கூறியது..
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டிசியான சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 04 குளிர் சாதன பெட்டிகள், 07 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், IRCTC தென் மண்டலம்/சென்னை சார்பில் “புண்ணிய தீர்த்த யாத்திரை” என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த சுற்றுலா மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றார். மேலும் இரயிலில் மொத்தம் 750 பேர் பயணம் செய்யலாம், இதுவரை 500 பேர் பதிவு செய்துள்ளனர்.
சுற்றுப்பயணம் தொடங்கும் தேதி 04.05.23 நாட்கள் – 11 நாட்கள்/12 இரவுகள்
பார்வையிடும் இடங்கள்: பூரி – கோனார்க் – கொல்கத்தா – சுயா – வாரணாசி -அயோத்தி
அலகாபாத்
கட்டணம்:
SL.class: Rs. 20,367/. 2 3Ac class: Rs.35,651/-
பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:
1. BAC வகுப்பு/5U வகுப்பில் ரயில் பயணம்
2. AC/NAC தங்குமிடம்
3. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து தென்னிந்திய சைவ உணவு
5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் 6. தினமும் 1 லிட்டர் வாட்டர் பாட்டில் × 2
7. இன்சூரன்ஸ்
ரயில் வழித்தடங்கள்
கொச்சுவேலி, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை,
சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம். சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடா ஐ.ஆர்.சி.டி.சி உடன் பாதுகாப்பாக பயணம் செய்து நன்மையை பெறுங்கள்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதுவிதமான சுற்றுலா திட்டங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஆகையால் பொதுமக்கள் இந்த சுற்றுலா பயணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.