வங்கிக்கு சென்று வருவதற்குள் பைக் அபேஸ்!

0 315
Stalin trichy visit

திருச்சி கோட்டை அரபிக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன்(வயது 74). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய கடைவீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். வங்கி முன்பு

தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.