சிறார் தீபாவளி கொண்டாட்டம்

0 218
Stalin trichy visit

திருச்சி பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பில் சிறார் தீபாவளி கொண்டாட்டத்தில் 500 குழந் தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டன.

பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாட முடியாத வறுமை சூழலில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளியை உற்சாகமாகக்கொண்டாடும் வகையில் சிறார் தீபாவளி என்ற அடிப்படையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி தேசியக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறார் தீபவாளி-2022 நிகழ்வில், 500 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், தீபாவளி பட்டாசுகள் மற்றும் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. பி.எஸ்.ஆர் நிர்வாகிகள் குணசீலன், காயத்ரி, திருச்சி தேசிய கல்லூரி செயலாளர் திரு ரகுநாதன், திரைப்பட இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ், கல்லூரி முதல்வர் திரு குமார், கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, திருச்சி திமுக கிழக்கு மாநகர செயலாளர் திரு. மதிவாணன், திருச்சி மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் மரு. ஏகநாதன், புரட்சி விதைகள் எடிசன், வீரமணி மற்றும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 11ஆவது ஆண்டாக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக டிரஸ்ட் நிறுவனர் ஷேக் அப்துல்லாஹ் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.