திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

0 399
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் முத்தரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மால்வாய் கிராமத்தில் பிஜேபி புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்று, மணல் மற்றும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்து, டாஸ்மார்க் கடையை மூடு, கஞ்சா கள்ளச்சாராயம் விற்பனையை அறவே ஒழித்திடு, ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டு, பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடு, உணவு பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து உள்ளிட்ட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மால்வாய், கல்லக்குடி, மேலரசூர், ஊட்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.