காதல்ஜோடியின் தற்கொலை முயற்சியில் காதலன் பலி; காதலிக்கு தீவிர சிகிச்சை

0 410
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டில் புதுக்கோட்டை மாலையீடு பகுதியைச் சேர்ந்த வினிஸ்(வயது28), திருநெல்வேலி மாவட்டம் சிட்டி யூனியன் வங்கியில் பணிபுரிந்து வரும் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த நிவேதா(வயது 25) காதலர்களான இருவரும் தூக்குமாட்டிக்கொண்டனர்.

இதில் காதலன் வினிஸ் தூக்குமாட்டி பலியான நிலையில் நிவேதா கழுத்தில் மற்றும் கையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் வினிஸின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.