மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு; திருச்சியில் துணிகரம்

0 672
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பில்லார் நகரை சேர்ந்தவர் வசந்தகுமார் இவர் சத்திரப்பட்டி பிரிவு ரோட்டில் மளிகை கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கல்லாவில் வைத்திருந்த 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.