சத்திரம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

0 660
Stalin trichy visit

முசிறி வடக்கு சித்தாம்பூர் சேர்ந்தவர் கனகராஜ். இவர் மண்ணச்சநல்லூர் கிளை டிப்போவில் அரசு பஸ்சில் டிரைவராக பணியில் உள்ளார். கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்தில் கண்டக்டராக சீனிவாசன் என்பவர் இருந்தார்.

இந்த நிலையில் அக்டோபர் 25ம் தேதி இரவு சமயபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்தை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தார். இதை அங்கிருந்த பயணிகள் வாலிபரை பிடித்து கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் கீழ சிந்தாமணி ஓடத்துறை சேர்ந்த சத்யா மகன் மணிகண்டன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.