வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

0 253
Stalin trichy visit

திருச்சி, டிச. 16 திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ்நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டை மூதாட்டியின் மகள் அனிதா அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வாராம். இந்நிலையில் நேற்று மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் தாய் வீட்டில் கதவு திறந்து இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அனிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டு பவுன் நகை, ஜிமிக்கி, தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று பவுன் நகை மற்றும் ரூ.20,000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அனிதா கன்டோன்மெண்ட்குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.