பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட்டு

0 321
Stalin trichy visit

திருச்சி குமரன் நகர் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் காவலாளி பணிக்கு வந்தார். அப்போது கேட்டின் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஸ்டோர் ரூமில் இருந்த டெலிபோன் வயர்களை திருடி சென்றனர்.

இதன் மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் இருக்கும். இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.