மணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ள கேக்குகள்!
திருச்சி, ஜன.1 மணப்பாறை அருகே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ள கேக்குகள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதமாக பேக்கரிகளில் அதிக அளவில் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கேக்குகளையும் தயார் செய்து விற்பனைக்காக காட்சிப்படுத்தி உள்ளனர். ஹனி, சாக்லேட், பிளாக் பாரஸ்ட், ஐஸ்கிரீம் கேக், வெண்ணிலா, ரோஸ் கேக் போன்ற எண்ணற்ற வகையான கேக் தயார் செய்து விற்பனைக்காகவும் வைத்துள்ளனர். அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலான கேக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கேக் 350 முதல் 2500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
2026 வருடப் பிறப்பை கொண்டாட இளைஞர்கள் மத்தியில் தற்பொழுது கேக் வெட்டி கொண்டாடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இதனால் அதிக அளவில் கேக்குகள் ஆர்டர் வருவதாகவும் இதனால் விற்பனைக்காக அதிக அளவில் கேக்குகளை தயார் செய்திருப்பதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.