கற்பூர கரைசல் : வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

0 1,121
Stalin trichy visit

கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. மேலும் மிக சிறந்த பயிர் ஊக்கியாகவும் செயல் படுகிறது. பூக்கள் வருவதற்க்கு காரணமான ஹார்மோன்களை கற்பூர கரைசல் தூண்டுவதால் அதிகமான பூக்கள் உண்டாகி அதிக மகசூலை குடுக்கும்.
தேவையான பொருட்கள் :
கற்பூரம் – 10 கி, வேப்பெண்ணெய் – 75 மி.லி, மஞ்சள் – 10 கி, கோமியம் – 500 மி.லி, சோப்பு கரைசல், நீலகிரி தைலம் .
செய்முறை :
‌‌ கட்டி கற்பூரம் 10 கிராம், கட்டி கற்பூரத்தை, நீலகிரி தைலத்தில் சேர்த்தால், கற்பூரம் கரைந்து, நீர்ம நிலைக்கு வந்துவிடும். சீயக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். சீயக்காய் கரைசலை, வேப்பெண்ணெய்யுடன் சேர்த்து கலக்கும் போது, வேப்பெண்ணெய் படலமாக தண்ணீரின் மீது மிதக்காமல், தண்ணீரோடு நன்கு கலந்துவிடும்.
பயன்கள் :
‌ 1. மிகச் சிறந்த வளர்ச்சிக்கு ஊக்கி ‌.
2. பூச்சி விரட்டி .
3. மகசூல் கொடுக்கும் .

மேலும் விவரங்களுக்கு , பா. பிரபாகரன் , இளங்கலை வேளாண் மாணவன், மற்றும் முனைவர் B . குணா, இணை பேராசிரியர் ,வேளாண் விரிவாக்கத்துறை ,நாளந்தா வேளாண்மை கல்லூரி, எம். ஆர் .பாளையம் ,திருச்சி . மின்னஞ்சல் : baluguna8789@gmail.com தொலைபேசி : 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.