மாடுகளை திருடியவர் கைது
திருச்சி, ஏப். 25 திருச்சி திருவரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11 மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது 4 மாடுகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் திருவரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (37) என்பவருக்கு சொந்தமான மாட்டையும் மர்ம நபர் திருடி சென்று இருந்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரிண்பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாடுகளை திருடியது திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டையை சேர்ந்த முகுந்தன் (27) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முகுந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.