கார், டூ வீலர் திருடர்கள் 3 பேர் கைது!
திருச்சி கீழசிந்தாமணி, இந்திராநகரில் டூவீலர் மெக்கானிக் பட்டறை நடத்தி வருபவர் ராஜசேகர்(வயது38). கடந்த 13ம் தேதி தனது காரை பட்டறையில் நிறுத்திச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கார் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் காரை திருடியது, திருப்பூர் ராஜா
(என்கிற) சகாய ஆரோக்கிய தர் மராஜ்(வயது 57), நாகை சுரேஷ் (வயது 41) தஞ்சையை சேர்ந்த பாண்டியன்(வயது 36) ஆகியோர் என தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள், ஸ்ரீரங்கம், கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்களையும், கோட்டை காவல் நிலைய பகுதிகளில் திருடுபோன 2 காரையும் பறிமுதல் செய்தனர்.