அடையாளம் தெரியாத வாகனம் மோதி முன்னாள் கிராம நிர்வாக உதவியாளர் பலி!

0 238
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 65 வயதான தேவதாஸ். இவரது மனைவி ஜனோவா மேரி. இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் மணக்கால் அடுத்த கொப்பாவளியில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றியவர். இவர் நேற்றிரவு கொப்பாவளி அருகே மர்ம வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். இதையடுத்து

அவ்வழியாக சென்றவர்கள் லால்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கவே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.