மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கழிப்பறை வசதி கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி, ஆக.3மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கழிப்பறை வசதி கோரி வழக்கு
திருச்சி கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அழகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:- நான் திருச்சி மாவட் டம் மணப்பாறையை பூர்வீகமாகக்கொண்டவன். மணப்பாறையில் காமரா ஜர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். எனது குழந்தைகளும் மணப்பாறை அரசு மருத்துவமனையி -லேயே பிறந்தனர். அந்த மருத்துவமனையில் சுமார் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கான புதிய கட்டி டம் கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. அப்பிரிவு திறக்கப்பட்டதில் இருந்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகள் மிக அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, தினமும் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்கு வரு கின்றனர். இதனால் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு வளாகத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அங்கு போதுமான, சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்
லை. இதனால் பொது ‘மக்களும், நோயாளிகளும் கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர். நோயாளிகள், பொதுமக்கள் அனைவரும் ஒரேயொரு கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், சுகாதாரமற்ற சூழல் நிலவு கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைக ‘ளுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகளை சுகாதாரமாக பராமரிப்பது மிகவும் அவசியம்.
எனவே அங்கு நோயாளிகள், பார்வையாளர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப போதுமான கழிப்பறை வசதிகளை விரைவாக அமைத்து தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.