குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாமல் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

0 333
Stalin trichy visit

முசிறி மேலசாலியர் தெருவை சேர்ந்தவர் வினையத்தான்(56). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்த குடும்பத்தினர் பலமுறை வலியுறுத்தியும் உள்ளனர்.

இதனால் கோபித்துக்கொண்டு சென்ற வினையத்தான் முசிறி பரிசல்துறை ரோடு கன்னிமார்கோவில் பின்புறம் உள்ள வாய்க்கால் கரைஓரத்தில் மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த முசிறி சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையில் போலீசார் வினையத்தான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.