காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

0 147
udhay

திருச்சி மாவட்டம் துறையூரில் அம்ரூத் திட்டத்தின் மூலம் 108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே என் நேரு அடிக்கல்  நாட்டினார்.

திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மமூலம் 108.90 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி குடிநீர் திட்ட பணிக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு இத்திட்டத்தை துவக்கி வைத்தார். கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு கிளியனூர் அருகில் ஐந்து நீர் உறிஞ்சும் கிணறுகள் மூலமாக துறையூர் நகருக்கு தனி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 19 கி.மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டமானது துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுமை அடையும் எனவும் அதன் பிறகு துறையூர் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இந்நிகழ்வில் அமைச்சர் கே என் நேரு உரையாற்றினார். !

trichymail

Leave A Reply

Your email address will not be published.