முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சி.பி.சி.ஐ.டி.யினர் சோதனை

0 535
Stalin trichy visit

கரூர், ஜூலை 5  கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர், யுவராஜ், செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். இந்த நிலையில், இன்று (ஜூலை 5) எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரை தேடும் பணி தீவிரமாகி உள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.