முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 326
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 5 திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்கூட்டம் நடைபெற்றது’ கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் வனஜா துணை வட்டாட்சியர்கள் தனபாக்கியம், மஞ்சு, மற்றும் செந்தில் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூறினர். கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதி அய்யாக்கண்ணு விவசாய பொறியியல் துறை சார்பில் கேஜ் வீலுடன் கூடிய டிராக்டர்கள் வாடகைக்கு விடப்பட வேண்டும் மேலும் வாய்க்காலில் சாக்கடை தண்ணீர் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்று பேசினார்.
மேலும் விவசாயிகள் காவிரி ஆற்றில் உமையாள்புரம் மருதூர் இடையே தடுப்பணை அமைக்க வேண்டும். வெள்ளூரில் சந்திப்பு கோயில் அருகில் வாய்க்காலில் இடித்த படித்துறை கட்டித் தர வேண்டும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றுப்படுகையில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முள்ளிப்பாடி ஏரியில் இருந்து கொளக்குடி அப்பன நல்லூர் தும்பலம் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் துலையாநத்தம் மங்கலம் கிராமங்களில் குரங்கு தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் பி. மேட்டூர் பகுதியில் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.