டீக்கடையில் செல்போன் திருட்டு: சி.சி.டி.வி. காட்சி வைரல்

0 302
Stalin trichy visit

திருச்சி, செப்.5  மணப்பாறையில் நள்ளிரவில் டீ கடையில் ஓசையின்றி நைசாக நுழைந்து செல்போனை திருடிச்செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலை பகுதியில் அதிகளவில் மருத்துவமனைகள் உள்ளதால் அப்பகுதிகளில் இரவு நேரத்திலும் டீக்கடைகள் செயல்படுவது வழக்கம். இந்நிலையில் பூ மார்க்கெட் பகுதியில் ஹரிகரன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் கடை திறந்து இருக்க ஊழியர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு கடையின் உள்ளே ஒரு சேரில் அமர்ந்தவாறு கண் அயர்ந்துள்ளார். அவர் அருகே தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டவாறு தூங்கிய நிலையில் அந்நேரத்தில் அப்பகுதியில் உலாவும் ஒரு மர்மநபர் கடையை நோட்டம் விட்டு ஊழியர் நன்றாக தூங்கிய போது சத்தமின்றி நைசாக உள்ளே நுழைந்து சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி விட்டு அதனை களவாடிச் சென்றுள்ளார். இக்காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.