திருச்சியில் முதல் முறையாக செந்தூரப் பூ மரம் அறிமுகம் மற்றும் நடும் விழா

0 882
Stalin trichy visit

செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் மற்றும் உள்ளது . தமிழகத்தில் செந்தூரப் பூ மரம் இல்லை .

இதை உணர்ந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , செயலர் டாக்டர் சி.ஆர்.பிரசன்னா இ.ஆ.ப அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டது.

மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு , பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப் பூ மரம் திருச்சியில் 04.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் திருச்சி இரயில்வே சந்திப்பு காலனியில் உள்ள கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உயர்திரு .எம்.பிரதீப் குமார் இ .ஆ .ப அவர்கள் செந்தூரப் பூ மரத்தை அறிமுகப்படுத்தி நட இருக்கிறார்.

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா .கிருஷ்ணசாமி
அவர்களிடம் சில செந்தூரப் பூ மரக்கன்றுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளார் . அவர் பெருமாள் கோயில்களில் நட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியிற்கு தாங்கள் வருகை புரிந்து சிறக்க அன்புடன் அழைக்கின்றோம் .

மரம் பி.தாமஸ், தண்ணீர் .கே.சி. நீலமேகம், விதைகள் எஸ்.யோகநாதன்

Leave A Reply

Your email address will not be published.