மிரட்டல் விடுத்த சவுக்கு சங்கர்: பெண் காவல் உதவி ஆய்வாளர் நீதிபதியிடம் புகார்

0 296
Stalin trichy visit

திருச்சி, மே 16   திருச்சி மாவட்டம், சைபர்கிரைம் கா.நி, குற்ற எண்- 21/24, U/s 294(b), 353, 509 IPC r/w 67 of IT Act and 4 of TNPWH Act-ன் வழக்கின் 1-வது எதிரியான சங்கர் (எ) சவுக்கு சங்கர் வயது 48, என்பவரை, நேற்று (15.05.2024)- ஆம் தேதி, கோவை மத்திய சிறையிலிருந்து (PT Warrant) மூலம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, அரசு மருத்துவமனைக்கு செல்ல முற்படும்போது, மேற்படி சவுக்கு சங்கர், நீதிமன்ற வளாகத்திலேயே, வழிக்காவல் செய்த பெண் உதவி ஆய்வாளரை, “நீயெல்லாம் ஒரு ஆளாடி உன்உயர் அதிகாரியைப்பற்றியே நான் மீடியாவில் போட்டு கிழிப்பேன், உன்னை என்ன பன்ன போரேனுபாரு, உன்னையும் மீடியால போட்டு கிழிப்பேன், வேலைகாலி பன்னுகிறேன், சட்டையை கழட்டாமல் விடமாட்டேன்” என ஒருமையில் பேசி, மேற்படி உதவி ஆய்வாளரை அரசுபணியை செய்யவிடாமல், மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக் கூறி இன்று (16.05.2024)-ஆம் தேதி, காலை மேற்படி உதவி ஆய்வாளர் நீதிமன்றத்தில் நீதிபதியிடமே புகார் மனு அளிக்க உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.