கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி NSS மாணவர்கள் சார்பில் தூய்மைப் பணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த “நம்ம ஊரு சூப்பரு ” திட்டத்தில் இன்று கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி NSS மாணவர்கள் சார்பில் அந்தநல்லூர் ஒன்றியம் பழூர் ஊராட்சியில் தூய்மைப் பணி – பனை விதைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.கி.சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த “நம்ம ஊரு சூப்பரு ” திட்டத்தில் இன்று கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி NSS மாணவர்கள் சார்பில் அந்தநல்லூர் ஒன்றியம் பழூர் ஊராட்சியில் தூய்மைப் பணி – பனை விதைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.கி.சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வு பழூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்டான்லி ராஜன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜீவா பெரியசாமி, துணைத்தலைவர் திருமதி.லதா, திரு.முத்துராஜா, பஞ்சாயத்து செயலாளர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து தூய்மைப் பணி நடைபெற்றது. குளக்கரையோரம் முத்தரசநல்லூர் வாய்க்கால் கரைகளில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50 பேர் பங்கேற்று விதைத்தனர். அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவர் திரு.மருதநாயகம் பங்கேற்று பனை விதைகள் விதைத்தார். பனை விதைப்பின் பயன் குறித்தும் பனை மரங்களின் சிறப்பு குறித்தும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து துணிப்பைகளை பயன்படுத்தி சூழல் நலம் பேண வலியுறுத்தப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மக்களுக்கும் பொது சுகாதாரம், தனிமனித சுகாதாரம் குறித்தும், கழிவறை சுகாதாரம், மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வை NSS திட்ட அலுவலர் பேரா.கி.சதீஷ் குமார் வழங்கினார்.
நிகழ்வின் நிறைவில் பேரா. இல.கோவிந்தன் நன்றி கூறினார்.