கடை உரிமையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதில் தேனீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் ஈக்கள் மொய்க்கும் வண்ணம் தூசிகள் படியுமாறும் திறந்த நிலையில் விற்பனை செய்து
வருவதாக உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வின்போது அறியப்படுகிறது. எனவே உணவு வணிக உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இதனை தவறும்பட்சத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யப்படுவதுடன், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.