காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..