முத்தரநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் 02.10.23 முற்பகல் நடைபெற்றது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ” எல்லார்க்கும் எல்லாம் ”
கிடைத்திட வேண்டும் என்ற .உயரிய நோக்கத்தை அடிப்படையாக் கொண்டு ஒட்டுமொத்த கிராம வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர் வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கிராமசபை நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆதிசிவன் தலைமை ஏற்று நடத்தினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திருமதி _ வெ.பேபி அவர்கள் கலந்து கல்வித்துறை சார்ந்த திட்டங்கள், மாணவர் நலத்திட் டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.வட்டாரக் கல்வி அலுவலர் திரு.கா. மருதநாயகம் அவர்கள் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தரமான கல்விக்கான முயற்சிகள் பற்றி எடுத்துக் கூறினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி.மீனா அவர்கள் கலந்து கொண்டு பள்ளி செல்லா குழந்தை மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி எடுத்துக் கூறினார்.