சீமான் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

0 280
Stalin trichy visit

திருச்சி, ஆக. 7 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் (அரசு வழக்கறிஞராகவும் உள்ளார்) முரளிகிருஷ்ணன். இவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். அதில்மீமீனீணீஸீ4ஜிழி என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோவாக பதிவு செய்து இருந்த தனது உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு/க ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும், ஆபாசமாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசி கொலை மிரட்டல் விடுத்தும், அதேபோல் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்தும் அவதூறு பரப்பியுள்ளார்.
தனது சுய லாபத்திற்காக தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறு பரப்பி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் கலவத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ள சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் பேசி பதிவு செய்துள்ள அவரது எக்ஸ் வலைதள பக்கத்தையும், நாம் தமிழர் கட்சியின் யூ டியூப் சேனலையும் முடக்கி வைக்க வேண்டும் என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.